Tuesday, September 16, 2008

அட்டவனை இனமக்கள் துணைத்திட்ட நிதியும் புதுச்சேரி அரசும்

இந்திய சமூகத்தில் ,சமூக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். 60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை. “சாதிய கொடுமைகள் ஒரு சமூக குற்றம் என அரசியல் அமைப்புச்சட்டம் வலியுறுத்தினாலும் இன்றை சமூக கட்டமைப்பு சாதிய அமைப்பு முறையை பாதுகாத்து வருகிறது. டாக்டர் அம்பேத்கார் குறிப்பிடுவது போன்று “அடுக்கிய மூட்டைகளில் அடி மூட்டைகளாக உள்ள தலித் மக்களின் சமூக – அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண மார்க்சிஸ்ட் கட்சிஅர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதை தாங்கள் அறிவீர்கள். தலித் மக்களின் சமூக விடுதலைக்கான வாழ்க்கை முன்னேற்றத்திற்கான போராட்டம் உழைப்பாளிகளின் உரிமைக்கான போராட்டமாகும். ஆதிக்க சக்திகள், பிறபோக்கு சிந்தனையாளர்கள் தவறாக சித்தரிக்க முற்படுவதை அனைத்து மட்டத்திலும் தடுத்திட வேண்டியது அரசின் கடமையாகும். இதில் பொறுப்புள்ள அரசியல்கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பாத்திரம் முக்கியமானதாகும்.
இந்த சூழ்நிலையில் தலித் மக்கள் நலத்திட்டங்களை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ 24 ஆயிரம் என்றிருப்பதை நீக்கியுள்ளதையும், தலித் மக்களுக்கான துணைத்திட்ட நிதியை கண்காணிக்க குழு அமைக்கவுள்ளதாகவும் தங்களின் அரசு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
புதுச்சேரி அரசு ஏற்படுத்தவுள்ள அட்டவனை இன மக்களுக்கான துணைத்திட்ட நிதியை கண்காணிக்க தலித் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவில்; மார்க்சிஸ்ட் கட்சிக்கு இடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும் அட்டவனை இன மக்கள் துணைத்திட்ட நிதியை செலவிடுவது தொடர்பாக மத்திய திட்டக்குழு வழிகாட்டுதல் நெறிமுறைகளை உறுதியாக பின்பற்றிடவும் மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச செயற்குழு தங்களை கேட்டுக்கொள்கிறது.
- V.பெருமாள்

1 comment:

மணி said...

CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !