ஜிப்மர் - புதுச்சேரியின் அடையாளம்
புதுச்சேரி மாநிலத்திற்கு அரவிந்தர் ஆசிரமம், ஆரொவில், பிரெஞ்சு கலாச்சாரக் கட்டிடங்கள் எவ்வாரெல்லாம் பெருமை சேர்க்கிறதோ அதே அளவு புதுச்சேரி தமிழகம் தென் மாநிலங்களின் ஏழைஎளிய அடித்தட்டு நோயாளி மக்களுக்கெல்லாம் நம்பிக்கைத்தரும் புகலிடமாக, சிறந்த மருத்துவமனையாக திகழ்கிறது ஜிப்மர் மருத்துவ மனை. பிரெஞ்சு இந்திய ஆட்சியாளர்களால் 1897 ஆம் ஆண்டு மருத்தவக்கல்லூரியாக தொடங்கப்பட்ட 1954 ல் இந்திய அரசால் தன்வந்திரி மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 1964 ஆம் ஆண்டிலிருந்து இந்திய சுகாதார அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.
சமூகத்தின அனைத்து பகுதியிலிருந்தும், ஆதரவற்ற ஏழைஎளிய நோயாளிகள் நாள்தோறும் நான்காயிரம் பேர்வரை அட்டை போடுவதிலிருந்து அறுவை சிகிச்சை வரை எவ்வித பாகுபாடு இல்லாமல் இலவசமாகவே மருத்துவ வசதி பெறுகிறார்கள். ஒரு மாத்திற்கு நான்காயிரத்த இரு நூறு உள்நோயாளிகள் படுக்கை வசதியுடன் சிகிச்சை பெறுகிறார்கள். நாட்டில் உள்ள மற்ற மருத்துவ மனைகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் தான் ஜிப்மரை புரிந்து கொள்ள முடியும். நாம் ஏதேனும் ஒரு நோய்க்காக சிகிச்சசைக்காக சென்றால் அந்நோய் சம்மந்தமான மற்றவைகளையும் ஆராய்ந்து அனைத்து பரிசோதனைகளையும் இலவசமாகவே பெறலாம். ஏழைஎளிய நோயாளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் புதுச்சேரி ஜிப்மர்.
ஜிப்மர் -தன்னாட்சி நிறுவனமாக மாற்ற …….
மத்திய ஆட்சியாளர்கள் 1982 ,1992,1999 திலும் ஜிப்மரை தன்னாட்சி நிறுவனமாக மாற்ற முயற்சித்து வந்தார்கள் முயற்சிகள் தொடங்கும்போதே ஜிப்மர் ஊழியர்கள் , அரசியல் கட்சிகள் தொழிற்சங்க அமைப்புகள் ஆகியவற்றின் வலுவான எதிர்ப்பினால் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதில் ஒவ்வொரு முறையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னாட்சியினால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து எதிர்ப்பதில் முன்னணி பாத்திரம் வகித்தது. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் பா.ம.க மத்திய கூட்டணி ஆட்சியில் பங்கேற்று அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும்பொது ஜிப்மர் தன்னாட்சிவ pஸ்வரூபம் எடுக்கும். 1999 ல் தலித் எழில்மலை ஜிப்மரை தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவேன் என்று முழங்கினார் பலத்த எதிர்ப்புகளால் பின்வாங்கினார்.
2005 ல் அன்புமணி சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றதும் ஜிப்மரை தன்னாட்சியாக மாற்றுவதுதான் அதனுடைய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார் . அதற்க ஆதரவாக பா.ம.க பாராளுமன்ற உறுப்பினர் கையேடு ஒன்றை வெளியிட்டார். அவ்கையேட்டில் யுஐஐஆளு , சன்டிகர் மருத்துவமனை போன்று ஜிப்மரையும் வசதி வாய்ப்புள்ளதாக மாற்ற தன்னாட்சியே மாற்று என்று சொன்னார்கள். ஆனால் அங்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவு அதற்கு மேல் அட்டை போட்டு பதிவு செய்வதுமுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிதியாதாரங்களும் அதற்கு ஒதுக்குவதற்கும் ஜிப்மருக்கு ஒதுக்குவதற்கும் அதிகவித்தியாசங் கள் என்பதெல்லாம் மறைக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றால் “ஜிப்மர் அட்டானமஸ்” ஆக வேண்டுமெனறெல்லாம் பேசப்பட்டது. ஜிப்மரில் இருக்கும் ஊழியர் பற்றாக்குறை , நிதிபற்றாக்குறைகளெல்லாம் பேச்படவே இல்லை.
AIIMS , சன்டிகர் மருத்துவக்கல்லூரிகள் தன்னாட்சி நிறவனங்களாகவே தொடங்கப்பட்டன் .அங்க நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதுடன் மருத்துவ படிப்பிற்காகவும் ஜிப்மரை விட கூடுதலாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவைகளை ஜிப்மருடன் ஒப்பிடவே முடியாது. மத்திய அரசின் கீழ் நேரடி செயல்பாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனை ஜிப்மர். இதை தங்களுடைய சுயநல நோக்கங்களுக்காக தன்னாட்சியாக மாற்றிட முயற்சிப்பது தௌ;ளத்தெளிவாக தெரிந்தது. ஊழியர் பற்றாக்குறையை தீர்க்க, நிதி பற்றாக்குறையை போக்க மருத்துவ மனைக்கு தேவையான ஆய்வு உபகரணங்கள், கருவிகள் வாங்க காலதாமதம் ஆவதை தடுக்க அனைத்திற்கும் அட்டானமஸ் தீர்வு என்றார்கள். ஜிப்மர் தற்போதுள்ள நிலை தொடர்ந்தாலும் அட்டானமஸ் ஆனாலும் அது மத்திய சுகாதாரத்துறையின் கீழ் மந்திரி அன்புமணி கட்டுப்பாட்டில்தான் இருக்கப்போகிறது. மந்திரிக்கு மனம் இருந்தால் மார்க்கம் உண்டு; ஆனால் அவரின் மனதோ வேறு எதிலோ நாட்டம் செலுத்திககொண்டிருக்கிறது.
தன்னாட்சிக்கெதிரான மக்கள் இயக்கங்கள்.
தன்னாட்சிக்கெதிராக கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களைவிட 2005 ல் அன்புமணியின் அறிவிப்புக்குப்பின் நடைபெற்ற போராட்டங்கள் வீரியம் மிக்கது.ஜிப்மர் அனைத்து தரப்பு ஊழியர்களும் வேறுபாடகளைக்கடந்து ஒற்றுமையாக நின்றனர். தங்களுடைய கோரிக்கைகளொடு ஏழைகளுக்கு இலவச மருத்துவம் புதுச்சேரி மாணவர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவபடிப்ப போன்றவைகளையும் வலியுறுத்தினர். புதுச்சேரி தொழிற்சங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து ஜிப்மர் தன்னாட்சி எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தா.முருகன் தலமைபொறுப்பேற்றார். பல்வேறுகட்ட இயக்கங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தன்னாட்சிக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினரின் கையேட்டிற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பிரசரம் வெளியிடப்பட்டது. புதுச்சேரியின் கிராமங்களிலும் ஒட்டியுள்ள தமிழகத்தின் மாவட்டங்களிலும் தன்னாட்சிக்கெதிரான பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. வழக்கம் போல் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் மிது பா.ம.க வினரால் தாக்குதலும் நடத்தப்பட்டது. மனிதச்சங்கிலி முழுக்கடையடைப்பு, கையெழுத்து இயக்கம் பேரணிகள் என்று சமீப காலங்களில் புதுச்சேரியில் நடைபெற்ற பெரும் மக்கள் இயக்கமாக ஜிப்மர் தன்னாட்சிக்கெதிரான போராட்டங்கள் புதுச்சேரியில் நடைபெற்றது. இதற்கெலடலாம் சிகரம் வைத்தாற்போல் தலைநகரம் nடெல்லியில் ஜிப்மர் ஊழியர்களும் புதுச்சேரி அரசியல் கட்சி , தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்ற தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உ.ரா.வரதராஜன், சுதா.சுந்தர ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கவுன்சில் செயலாளர் து.ராஜா ஆகியோர் வாழ்த்திப்பேசியது குறிப்பிடத்தக்கது. ஜிப்மர் ஊழியர்களின் 23 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் அவர்களது பலவேறு வகையான போராட்டங்கள் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தியது. நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். பல ஊழியர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு போட்டது. ஐந்து செவிலியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தனர். தன்னாட்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறிய கட்சிகள் மக்கள் இயக்கத்தைப்பார்த்து தன்னடைய நிலையை மாற்றிக்கொண்டது. புதுச்சேரி தி.மு.க வை பொறுத்தவரை தன்னாட்சிக்கு ஆதரவாகவே நின்றது துரதிஷ்டவசமானது! குhங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 3, 4 கோஷ்டிகள். தன்னாட்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் அறிக்கை வெளியிட்டுக்கொண்டு இருந்தனர். ராஜியசபா உறுப்பினர் நாராயணசாமி தன்னாட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டார் ஒருசில கட்சிகள் இந்த இயக்கங்களால் சி.பி.எம் க்குத்தான் லாபம் எனக்கருதி ஒதுங்கிக்கொண்டதுமுண்டு.
பா.ஜ.க விற்கும் அ.தி.மு.க விற்கும் உள்நோக்கங்கள் இருந்தாலும் இந்த காலகட்டங்களில் தன்னாட்சிகெதிரான இயக்கத்தில் மக்கள் போராட்டக்குழு வோடு இணைந்து பங்காற்றியது புதுச்சேரியின் விசேஷ அரசியல் தன்மை.
முhர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ;கட்சியை பொறுத்தவரையில் தலித் எழில் மலை சுகாதார அமைச்சராக இருந்த பொதும் தன்னாட்சியை எதிரத்தது அமைச்சர் அன்பமணி கொண்டவந்த போதும் எதிர்த்தது. ஜிப்மர் தன்னாட்சியாவதை தனிப்பட்ட கட்சியினுடைய அதைச்சார்ந்த அமைச்சருடைய அவரது குடும் ப உறுவுகளை சார்ந்து , குடும்ப நலனை முன்னிறுத்தும் விஷயமாக சி.பி.எம் பார்க்கவில்லை. மாறாக உலகமயம் தாராளமயம் தனியார்மயம் என்ற கொள்கையின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளும், மேலும் உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனம், உலகவர்த்தக அமைப்பு ஆகியவற்றின் கட்டளைகளை சிரமேற்கொண்டு செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியே ஜிப்மர் தன்னாட்சி நடவடிக்கை எனக்கரு உலகவங்கி நலவாழ்வுக்கான பொது நிதியை வெட்டவும் அதற்குபதில் துகிறது. நோய் சிகிச்சை முறையை தனியாரிடம் ஒப்படைக்கவும்தான் பரிந்துரைத்தது. இதனால் இந்திய அரசு “2000 ல் அனைவருக்கும் நலவாழ்வு “என்ற உறுதியிலிருந்து பின்வாங்கிக்கொண்டது. சகாதாரத்திற்காக இந்திய அரசு செலவழிக்கும் தொகை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும் போது இதன் சதவீதம் 1990 ல் 1.3 சதவீதத்திலிருந்து 1999 ல் 0.9 சதமாக குறைந்துள்ளது. இந்திய அரசின் பட்ஜெட்டில் மிகக்குறைந்த செலவு மக்கள் சுகாதாரத்திறகுத்தான். வளர்ச்சியடைந்த நாடுகளில் சுகாதாரத்திற்கு குறைந்தது 8 சதவீதம். ஆப்பிரிக்க சகாரா பகதிகளில் கூட சுகாதாரத்திற்கு குறைந்தது 5 சதவீதம் ஆனால் இந்தியாவில் சுகாதாரத்திற்கு …….?
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை வழிநின்ற மக்கள் இயக்கங்களை பா.ம.க கொச்சைபடுத்தியது . திசை திருப்பியது . எதிர்போராட்டங்களை நடத்தியது. பா.ம.க தலமை டெல்லியில்பேசிவிட்டோம்;;தமிழக தலைமையிடம் பேசிவிட்டோம்.”முருகன் மீது நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார். “எந்த கொம்பனாலும் ஜிப்மர்தன்னாட்சியாவதை தடுக்க முடியாது என்று கொக்கரித்தார். மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அட்டானமஸ் கொள்கையை ஆதரிக்கிறது. ஆனால் புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் (முருகன்) எதிர்க்கிறது என்று போஸ்டர் போட்டார்கள் .மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை சரியாகவே முடிவெடுத்தது. டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்த போதும் , மக்கள் போராட்டக்குழுவிற்கு வழிகாட்டியதோடு மக்கள் விரோத மசோதாக்களை, நடவடிக்கைகளை சி.பி.எம் எக்காலத்திலும் ஏற்காது என்று அறிவித்தது. அனைத்து நிலைகளிலும் ஏழைஎளிய மக்களோடு தான் கரம் கோர்த்து நிற்போம் என்ற உறுதியான நிலையை சி.பி.எம் எடுத்தது. அட்டானமஸ் என்ற கொள்கையை நாங்கள் எதிர்க்கவில்லை அட்டானமஸ் பெயரில் வரும்’ மக்கள் விரோத ஊழியர் விரோத நடவடிக்கைகளை எதிரக்கிறோம் என்ற தனது தெளிவான நிலையை எடுத்துரைத்தது.
அமைச்சர் அன்புமணி முதல் கட்டத்தில் தன்னாட்சி மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்ப்பு வந்த பொது பின்வாங்கி திருத்தங்கள் செய்திருக்கிறேன் என்று தேதியை 2005 என்பதை 2007 என்று மாற்றி அப்படியே கொண்டுவந்தார். அப்போதும் பலத்த எதிர்ப்புக்கிடையில் மசோதா நாடாளுமன்ற சுகாதார நிலைக்குழுவின் ஆலோசனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நாடாளுமன்ற நிலைக்குழு புதுச்சேரிக்கு வந்து அனைத்து அரசியல் கட்சிகள் தொழிற்சங்க அமைப்புகளை சந்தித்தது. மார்க்சிஸ்ட் கட்சி,அதன் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன் அவர்களின் தலைமையில் நிலைக்குழுவை சந்தித்தது. ஜிப்மர் தற்போது ள்ள நிலையிலேயே தொடர வேண்டும் கூடுதல் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்,ஊழியர் காலிஇடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் ஏழைஎளிய நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேலை தொடர வேண்டும் .புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கு ஊரூனு பிரிவு பதவிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் எடுக்கப்பட வெண்டும். மருத்துவபடிப்ப்pல் 20 புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்கும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தொடர வேண்டும். ஜிப்மர் ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் என்ற அந்தஸ்திலேயே தொடர வேண்டும் போன்ற அம்சங்கள் மசோதாவில் சேர்க்கப்படவேண்டும் அதற்கேற்றாற்போல் திருத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. நிலைக்குழு உறுப்பினர்களும் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து முழுமையாக ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு கட்டத்திலும் சி.பி.எம் கொள்கை வழி நின்றே முடிவுகளை மேற்கொண்டது.
பாராளுமன்றத்தில்டிச 5 ல் ராஸ்யசபையில் அமைச்சர் அன்புமணி மசோதாவை தாக்கல் செய்கறார். மார்க்சிஸ்ட் ட்சியின் மக்கள் போராட்டக்குழு ஆலோசனைகளையும் ஏற்கவில்லை. நிலைக்குழுவின் பரிந்துரைகளும் கணக்கில் எடுக்கப்படவில்லை. 2005 ல் எதைச்சொன்னாரோ….. அiயேமாற்றம் இல்லாமல் சொல்கிறார். சி.பி.எம் உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அவர்கள் இலவச மருத்துவ சேவை, ஊழியர்களின் நிலை, மருத்துவக்கல்வி போன்றவை பற்றி திருத்தங்களுடன் மசோதா வரட்டும் பார்ப்போம் என்ற தனிக்கருக்களை அழுத்தமாக பதிவு செய்து மசோதாவை சி.பி.எம் சார்பில்கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் அன்பமணி மசோதாவை வாபஸ் பெற்றார் பாராளுமன்றத்தின் வரலாற்றில் , பிரதமர்,ஒப்பதலுடன் , அமைச்சரவை யில் ஏற்கப்பட்ட மசோதா, அமைச்சர் ஒரவரின் வக்கிரமான ஈகோவால் , சுயநலத்தால் பின்னுக்குத்தள்ளப்பட்டது. பாராளுமன்றத்தில் அமைச்சரவைஒப்புதலுடன் கொண்டுவரப்பட்ட மசோதா வாபஸ் ஆனது இதுவே முதல் தடைவ இது துரதிஷ்ட வசமானது என்று பாராளுமன்ற விவகாரங்கரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஜ் முன்ஷி கூறுகிறார். பா.ஜ.க எம்.பி அலுவாலியா, இதை ராஜ்ய சபாவில் ஓட்டெடுப்புக்கு விடலாம் என்றார். அ.தி.மு.க எம்.பி மைத்திரேயன் இம்மசோதா மருத்தவ சமுதாயத்திற்கும் , ஜனநாயகத்திற்கம் எதிரானது என்றும் ஜிப்மரை அழிக்க முயலுகிறார் அன்புமணி என்றார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்று ஒன்று நடைபெற்றுக்கொண்டிருப்பதே மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் ஆதரவு இருப்பதால்தான். அன்பமணி அவர்கள் அமைச்சராயிருப்பதும் அதில் தான். இதையெல்லாம் சம்மந்தப்பட்ட அமைச்சர் மறந்துவிட்டார். இந்திய அரசியல் சூழல் ,கவிழ்ப்புக்காட்சிகள் நடத்த தயாராக இருக்கும் கட்சிகள் மத்தியில் குறைந்த பட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆட்சியாளர்களையும் அன்பமணி ஆதரித்து வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆலோசனைகள் எப்போதும் மக்கள் நலன் சார்ந்ததாயிருக்கம். என்பதை புரிந்து கொள்ளாமல் தானடித்த மூப்பாக அவரது நடவடிக்கை இருக்குமேயானால் அவரை யார் தான் காப்பாற்றுவார்கள்.
நாடாளமன்றத்தில் இடதுசாரிகள் எண்ணிக்கையின் பலம் பல மக்கள் விரோத மசோதாக்கள் பின்னுக்குத்தள்ளப்படவதில் உதவியளிக்கிறது. அதில் ஜிப்மர் தன்னாட்சி மசோதாவும் ஒன்று.
நரிகளின் சாயம் வெளுத்தது. அமைச்சர் அன்பமணி, நாடாளுமன்றத்தில் மசோதாவை ஏற்றுக்கொள்ளுங்கள். திருத்தங்கள் பின்னர் செய்கிறொம் என்கிறார். ஆனால் திருத்தங்களிலும் , இலவச மருத்தவ சேவைப்பற்றி , மருத்துவ படிப்பு பற்றி செய்ய முடியாது என்கிறார். மற்றவை கள் பற்றி உறுதிகூட அளிக் மறுக்கிறார். ஊழியர் பாதுகாப்பு,இடஒதுக்கீடு என்று கூறி திசை திருப்புகளும் ராஜ்யசபா உறுப்பினர் புதுச்செரியை ச்சேரிந்த நாராயணசாமி அவர்கள் தன்னாட்சியா மாறினாலும் இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று புதிய கருத்துப் போல கூறுகிறார். தன்னாட்சிக்கெதிரான போராட்டத்தை வெறும ;ஊழியர் பிரச்சனைக்கான போராட்டமாய் சித்தரிக்கிறார்கள். காலதாமதங்கள் நிர்வாகச்சீர்கேடுகள் பற்றி பேசுகிறார். ஆலோசனைக்குழுவில் தான் இடம் பெற்றிட வேண்டும் என்கிறார். ஊழியர்கள் நியமிப்பதிலும் உபகரணங்கள் வாங்குவதிலும் காலதாமாவதும் போன்றவைகளுக்கு யார்காரணம்? நிர்வாகச்சீர்கேடுகளுக்கு , நிதிபற்றாக்குறைக்கு யார்காரணம்? விடுதலைக்குப்பின் நீண்டகால மத்திய ஆட்சி யாளர்கள்? புதுச்சேரியின் நாடாளமன்ற பதவிகளில் அதிக நாட்கள் பவனி வரும் நபர் யார்? நூராயணசாமிக்கு இதெல்லாம் தெரியாதா?
துன்னாட்சி மசோதாவில் என்ன இருக்கிறது என்று இவருக்கு தெரியாதா? நுpலைக்குழுவில் காங்கிரஸ் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். சிலர் வெறும் ராஜ்ய சபா உறுப்பினராகமட்டுமல்ல. அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் கூட. அன்பமணி ஆகட்டும், நாராயணசாமி ஆகட்டும் மக்கள் நலம் சார்ந்து ஜிப்மரை பாதுகாக்கட்டும். அதற்கான திருத்தங்களை மசோதாவில் திருத்தப்பட்டும் இவர்களது நடவடிக்கைகளை தங்கள் சுயநலங்களை மன்வைப்பதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். இவர்களது சாயம் வெளுக்கத் தொடங்கியிருக்கிறது. முழுமையான உருவம் வெளிப்படும் காலம் வெகு தெலைவில் இல்லை.
ஏதிர்காலத்தில்…..
மசோதாக்கள் தற்போது தற்றாலழிகமாக பின்னுக்கு போயிருக்கிறது. மாரிசன் வேடத்தில் மீண்டும் வரலாம். நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஜிப்மர் தன்னாட்சிக்கெதிரான போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. அதற்கு இடது சாரிகளின் பாராளுமன்ற பலமுமு; முக்pய காரணம். ஒன்றுபட்ட மக்கள் இயக்கங்களும் காரணம். மற்ற போராட்டங்களைவ pட இது ஒரு தனித்துவமிக்க போராட்டமாக நடந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முன்னெப்போதையும் விட ஜிப்மர் ஊழியர்களின் ஒற்றுமை பேனப்படவேண்டும். புதுச்சேரிமக்களும,; அரசியல் , தொழிற்சங்க அமைப்புகளும் விழிப்புடன் இருந்து செயல்படவேண்டிய தருணம் இது.
புதுச்சேரியில் செயல்பட்டுவரும் ஜிப்மர் சர்வதேசிய அளவில் புகழ்பெற்றது. பிரெஞ்சு ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்டது. 1.11.1954 ல் பிரெஞ்சு அரசும், இந்திய அரசும் செய்து கொண்டு நல்லெண்ண உடன்படிக்கையின் படி பிரெஞ்சு அரசினால் உருவாக்கப்பட்ட எந்த நிர்வாகமும் புதுவை வாழ்மக்களின் எண்ணத்திற்கு மாறாக மாற்றப்படக்கூடாது . அந்த உயரிய நோக்கத்திற்க மதிப்பளித்து ஜிப்மர் தற்பொதுள்ள நிலையிலேயே தொடரவேண்டும். தன்னாட்சி நிறுவனமாக மாற்றி தனியாரிடம் தாரை வார்க்க முயற்சிக்க்கூடாது . ஏழைஎளிய மக்களுக்கு இலவச மருத்துவம் தொடரவேண்டும். புதுச்சேரி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உரிய இடங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் ஊரூனு பிரிவு புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பகம் மூலம் நிரப்ப்பட வேண்டும். ஜிப்மர் ஊழியர்கள் எக்காலத்திலும் மத்திய அரசுஊழியர் என்ற அந்தஸ்திலேயே தொடரவேண்டும்.
ஊண்மையில் அமைச்சருக்கும் ,புதுச்சேரி நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் ஜிப்மர் மீது அக்கறை இருந்தால் அவர்களது கையேட்டில் ஒதுக்கியதாக குறிப்பிட்டுள்ள ரூபாய் 230.10 கோடியை உடனடியாக வழங்குவதும் காலழிஇடங்களை நிரப்புவதும் தேவையான நடவடிக்கைகளேயாகும். சுமூக நீதிகாக்க தமிழ்மொழியின் ‘ஓசை’ஒளிக்க ஜிப்மர் சுயநலமிகளிடமிருந்து காக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எஸ்.ராமச்சந்திரன், புதுச்சேரி